வெளியானது கேஜிஎப் - 2 திரைப்படத்தின் முதலாவது பாடல்..! அவன் கத்தி வீசுன வேகத்துல புயலே உருவாகிடுச்சு..!

Kgf Chapter Second First Song Released Today

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான ” Toofan” என்ற பாடல் இந்தியாவின் முக்கிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

Share this post