கையில் 'V'.. அப்போ விஜய் - கீர்த்தி சுரேஷ் கிசுகிசு உண்மை தானா..? புகைப்படத்தில் கிளம்பிய சர்ச்சை..!
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. என்னதான், திரையுலகை பொறுத்தவரை விஜயை கொண்டாடி வந்தாலும், விஜய் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் ஏராளமாக உலாவி வருகிறது. அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. காரணம், நடிகர் விஜய் திரைப்பட விழா, பிரபலங்களின் திருமணம் எது என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார். நிறைய ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பங்குபெற்றுள்ளார்.
ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும், வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் தனது மனைவியை அழைத்து வரவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபட்டது. மேலும், கீர்த்தி சுரேஷுடன் விஜய் நெருக்கமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் கையில் V என்ற எழுத்து இருக்கும் படி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் சிலர், V என்றால் விஜய்யா என்று கேட்டு வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்து வெளியான தசரா படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் வெண்ணிலா அதற்காக V என்ற எழுத்தை பிடித்தது போஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.