பாடி ஷேமிங் ட்ரோல்.. தக்க பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

keerthi-suresh-reply-to-troll

விக்ரம் பிரபு உடன் இது என்ன மாயம் படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இருந்தாலும், இவருக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் வேற லெவலில் கீர்த்தி சுரேஷ் உயர்த்தியது.

keerthi-suresh-reply-to-troll

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் குடி கொண்டார். அதன் பிறகு இவர் நடித்த நடிகர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார்.

keerthi-suresh-reply-to-troll

இதனிடையே, உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு மற்றும் தமிழ் எனப்படு பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சினிமாவிற்கு வந்து சுமார் பத்து வருடங்கள் நிறைவு அடைந்ததை அடுத்து நன்றி கூறியுள்ள கீர்த்தி சுரேஷ் அந்த பதிவில், இப்போதுதான் கேரியரை துவங்கியது போல் உள்ளது.

keerthi-suresh-reply-to-troll

ஆனால், அதற்குள் பத்து வருடங்கள் ஆகிவிட்டது என் பயணத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி என்றும், குறிப்பாக என்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் ரோல் தான் என்னுடைய சினிமா வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என்றும், கீர்த்தி சுரேஷ் கெட்டதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Share this post