தலைவர் 169ல் வில்லன் இவர்தானாம் ! கேஜிஎஃப்-க்கே டஃப் கொடுப்பாங்க போலயே !

Kannada actor siva rajkumar to play villan role in thalaivar169

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘தலைவர்169’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

Kannada actor siva rajkumar to play villan role in thalaivar169

தொடர் வெற்றி படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தலைவர்169 இவர் இயக்கமாட்டார் என தகவல் பரவி வந்த நிலையில், ரஜினி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர்169 பட போஸ்டரை பதிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Kannada actor siva rajkumar to play villan role in thalaivar169

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், முக்கியமான ரோலில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க போவதாகவும் கூறப்பட்டது. தலைவர் 169 படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுட்டிங்கே ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Kannada actor siva rajkumar to play villan role in thalaivar169

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் தகவலாக, தலைவர்169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட மெகா ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் பெயரிடப்படாத படம் உட்பட 4 படங்களில் நடித்து வருகிறார் சிவ ராஜ்குமார்.

Kannada actor siva rajkumar to play villan role in thalaivar169

இதுவரை பாலிவுட், டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க வைத்து வந்தனர். கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கன்னட திரையுலகின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது.

Kannada actor siva rajkumar to play villan role in thalaivar169

விஜய்யின் தளபதி 67 படத்தில் வில்லனாக சஞ்சய் தத்திடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post