டபுள் ஆக்ஷன்.. தாறுமாறான பாடல்.. வெறியாட்டத்தை காட்டவிருக்கும் 'நானே வருவேன்'.. விரைவில் பர்ஸ்ட் சிங்கிள் !

Naane varuven first single to release soon

கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட் என பெரிய ஹீரோவாக மாறியுள்ள நடிகர் தனுஷ், தனது சகோதரர் செல்வராகவன் உடன் 4வது முறையாக இணைந்து பணியாற்று திரைப்படம் ‘நானே வருவேன்’. 3 வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி, இப்படத்தை உருவாக்கி வருகிறது.

Naane varuven first single to release soon

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் சேர்ந்துள்ள தனுஷ் நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். மேலும், யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Naane varuven first single to release soon

இப்படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும், இவர்களுடன், இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

Naane varuven first single to release soon

இதனையடுத்து தற்போது இத்திரைப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உள்ளதாகவும், அதில், விரைவில் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Naane varuven first single to release soon

Share this post