எலிமினேஷன் கார்டில் கமல் கொடுத்த ஷாக்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், நேற்று ஷெரினா எவிக்ட் ஆகி வெளியேறினார்.
நடிகர் கமல்ஹாசன் இன்றைய பிக்பாஸ் ஷோவில் முன் எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்களை எச்சரித்து இருக்கிறார். விதிகளை மதிப்பதில்லை, நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுகிறார்கள், எழுதி காட்டுகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்ன கமல், ‘நானே ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பிவிடுவேன்’ என எச்சரித்து இருக்கிறார். இந்நிலையில், நேற்று ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார்.
அவர் வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி வந்தார். கமல் பல முறை வார்னிங் கொடுத்தும் அது தொடர்ந்தது. இதனால், ஷெரினா நேற்று வெளியேற்றப்பட்டார். கமல் கார்டை காட்டி தான் அறிவித்து இருக்கிறர். ஆனால் அந்த கார்டு மலையாளத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து மலையாளத்தில் பேசியதால் தான் ஷெரினா எலிமினேட் ஆகிறார் என காட்டத்தான் இப்படி செய்திருக்கிறார் கமல்.
#Day28 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/qAImaaYU1t
— Vijay Television (@vijaytelevision) November 6, 2022