நானே ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிடுவேன்.. எச்சரித்த கமல்.. வைரலாகும் வீடியோ

kamalhaasan warning contestants for breaking biggboss house rules video getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

kamalhaasan warning contestants for breaking biggboss house rules video getting viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

kamalhaasan warning contestants for breaking biggboss house rules video getting viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

kamalhaasan warning contestants for breaking biggboss house rules video getting viral

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், நேற்று ஷெரினா எவிக்ட் ஆகி வெளியேறினார்.

kamalhaasan warning contestants for breaking biggboss house rules video getting viral

நேற்று, கமல்ஹாசன் வரும் நாளில் அவர் போட்டியாளர்கள் செய்யும் நிறைய தவறுகளை சுற்றி காட்டினார். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்க்குக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுவது, மைக்கை மூடிக்கொண்டு பேசுவது, ரகசியமாக பேசுவது, எழுதி காட்டுவது என செயல்களில் ஈடுபடுவதை தான் கமல் கண்டித்தார். அதற்காக தேவைப்பட்டால் நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்வேன் என கமல் எச்சரித்து இருப்பது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.

Share this post