‘நாயகன் மீண்டும் வரார்’ தெறிக்கும் BGMவுடன் வெளியான மாஸான ப்ரோமோ !

Kamal haasan vikram ott release date announcement

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Kamal haasan vikram ott release date announcement

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Kamal haasan vikram ott release date announcement

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Kamal haasan vikram ott release date announcement

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Kamal haasan vikram ott release date announcement

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Kamal haasan vikram ott release date announcement

விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுது.

Kamal haasan vikram ott release date announcement

அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 300 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்றது.

Kamal haasan vikram ott release date announcement

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.

Kamal haasan vikram ott release date announcement

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் சமயத்தில் அதிகம் பேசப்பட்ட உலக நாயகன் கமல் push-up எடுக்கும் வீடியோ தற்போது லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள வீடியோவில் பீரங்கி மீது கமல் 26 முறை push-up எடுத்த வீடியோ தற்போது அதிகம் வைரல் ஆனது.

Kamal haasan vikram ott release date announcement

திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட விக்ரம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேகமான புரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ‘நாயகன் மீண்டும் வரார்’ எனும் BGM ஒலிக்க கெத்தாக நடந்து வரும் கமலின் மாஸான காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படம் வருகிற ஜூலை 8ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post