2வது குழந்தையை முதல்முறையாக காட்டிய சஞ்சீவ் - ஆலியா மானசா.. வைரலாகும் வீடியோ !

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ, சீரியல், மேடை நிகழ்ச்சிகள் என அதில் ஒளிபரப்பாகும் அனைத்தும் நல்ல வரவேற்பை பெறுவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில், இப்படி இந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் பிரபலம் ஆகி விடுவார்கள் என சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு பரவலாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என ஒளிபரப்பான தொடர் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் நம் ஆலியா மானசா. இந்த தொடரில் நடிக்கும் சமயத்தி, டப்ஸ்மேஷ் செய்து வீடியோ போடுவது, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது என செம பேமஸ் ஆக ரசிகர்களை கவர்ந்தார்.
அப்படி, ராஜா ராணி சீசன் 1ல் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடியாக நடித்திருந்தனர். இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர்கள, ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஆலியா மானசாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும். சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார்.
மேலும், இனி அந்த சீரியலில் என்றும் அறிவித்தார். ஆனால், இன்னும் சில மாதங்களுக்கு பின், வேறு சீரியலுக்கு திரும்புவதாக தெரிவித்திருந்தார்.
தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்து வரும் ஆலியா, அதில் வீடியோக்களை பதிவிடுவது, தனது குழந்தைகள் குறித்து பதிவிடுவது என இருந்து வருகிறார். மேலும், சில நிகழ்ச்சிகள், திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.
நடிகர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். குழ்நதை பிறந்து சில மாதங்கள் ஆகிவிட்டதால் விரைவில் நடிகை ஆலியா நடிக்க வருவார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தற்போது, முதல் முதல் முறையாக தங்களது இரண்டாவது குழந்தை அர்ஷ்யையும் வெளியுலகிற்கு காட்டியுள்ளனர். அந்த விடியோவை அவர்கள் தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது.