ரசிகர்கள் பேட்டியில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த கமல்.. அதிர்ச்சியில் கண் கலங்கி நின்ற ரசிகர்கள்.. Viral Video

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். 1986ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் அப்படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான அப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து, கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இருந்து கடந்த வாரம் ரிலீசான ‘பத்தல பத்தல’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

இப்பாடலை கமல் ஹாசன் தனது சொந்த லிரிக்ஸ் மற்றும் குரலில் பாடியிருந்தார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அந்தவகையில், ‘சோனி மியூசிக்’ சார்பில் Fan Boy Moment வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள் சிலர், கமல் ஹாசன் அவர்களை குறித்து பேசிக் கொண்டிருந்த போது, அவரை ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

அப்போது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், கமல் அவர்களுக்கு பின்னால் வந்து நின்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Kamal haasan surprise visit during fan boy moment fan interview

அவரை பார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள் கண்கலங்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இதேபோன்று ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Share this post