இந்த சீசனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்ஹாசன்..? ஷாக்கிங் அப்டேட்

kamal haasan planning to quit biggboss after this season information trending on social media

களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.

kamal haasan planning to quit biggboss after this season information trending on social media

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.

kamal haasan planning to quit biggboss after this season information trending on social media

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

kamal haasan planning to quit biggboss after this season information trending on social media

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

kamal haasan planning to quit biggboss after this season information trending on social media

கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஆரம்பமான கமலின் பயணம் தற்போது 6 சீசன்களாக தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை இவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக தொகுத்து வழங்க முடியாது என சொல்லும் அளவுக்கு வேறலெவலில் தொகுப்பாளராக கமல் மக்களை இம்ப்ரெஸ் செய்து வருகிறார்.

kamal haasan planning to quit biggboss after this season information trending on social media

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் என கமலின் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

kamal haasan planning to quit biggboss after this season information trending on social media

இதுதவிர அரசியல் பணிகளும் இருப்பதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சீசனின் பைனலில் பிக்பாஸில் இருந்து தான் விலக உள்ள அறிவிப்பை கமல் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

Share this post