குழந்தையுடன் கொஞ்சி மகிழும் தருணத்தை ஷேர் செய்த காஜல் அகர்வால்.. வைரலாகும் போட்டோஸ் !

Kajal agarwal shares her baby neil kitchlu photo on instagram

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மொழியில், துப்பாக்கி, மாற்றான், விஸ்வாசம், மாரி 1 போன்ற படங்களில் விஜய், அஜித், தனுஷ், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Kajal agarwal shares her baby neil kitchlu photo on instagram

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள காஜல், தெலுங்கிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார்.

Kajal agarwal shares her baby neil kitchlu photo on instagram

தனது பேபி பம்ப் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த காஜல், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். பின்னர், நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

Kajal agarwal shares her baby neil kitchlu photo on instagram

அடுத்த நாளே, கவுதம், குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த செய்தி அறிந்ததும் சமூக வலைதளங்களில் வைரலாகி வாழ்த்துக்கள் குவிந்தன.

Kajal agarwal shares her baby neil kitchlu photo on instagram

அன்னையர் தினத்தன்று, தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு தனது மகனுக்கு அன்பு வாழ்த்து கூறி முதன்முதலாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

Kajal agarwal shares her baby neil kitchlu photo on instagram

தற்போது, தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் காஜல்.

Kajal agarwal shares her baby neil kitchlu photo on instagram

Share this post