ட்ரோல் & மீம்ஸ் பற்றி முதல் முறையாக பேசிய நெல்சன்.. வைரலாகும் வீடியோ !

Nelson dilipkumar talks about trolls and memes about him indirectly

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்ததை தொடர்ந்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் நெல்சன் திலீப்குமார்.

Nelson dilipkumar talks about trolls and memes about him indirectly

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

Nelson dilipkumar talks about trolls and memes about him indirectly

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே அதிகம் பெற்றது. இதனால் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது.

Nelson dilipkumar talks about trolls and memes about him indirectly

இதனிடையே நெல்சன் அடுத்து ரஜினியின் 169 படத்தை இயக்கவுள்ளார். ஆனால் அப்படம் ஷூட்டிங் பணி தொடங்கும் முன்பே பீஸ்ட் பட தோல்வி காரணமாக நெல்சன் அப்படத்தை இயக்கமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனர் இயக்குவார் என தகவல் பரவியது.

Nelson dilipkumar talks about trolls and memes about him indirectly

ஆனால், லோகேஷ் படத்தை இயக்குவதை ரஜினி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் போட்டோ பதிவிட்டு உறுதி செய்தார். இந்நிலையில், நெல்சனை மீம் க்ரியேட்டர்கள் வெச்சு செய்து வருகின்றனர்.

Nelson dilipkumar talks about trolls and memes about him indirectly

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Nelson dilipkumar talks about trolls and memes about him indirectly

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவையே வேற லெவல் கொண்டு போய்விட்டார் என புகழ்ந்து வரும் நெட்டிசன்கள் அதே நேரம் நெல்சன் திலீப்குமார் அவர்களை கலாய்த்து மீம் போட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மவுனம் காத்து வந்த நெல்சன், சமீபத்தில் ஒரு விருது விழாவில், அவரை பூஜா ஹெக்டே மேடைக்கு அழைத்து டான்ஸ் ஆட சொன்ன போது, ‘“நான் ஆல்ரெடி மாட்டிட்டு இருக்கேன், சைலண்டாக கீழே சென்று உட்கார்ந்துகொள்கிறேன்” என கூறினார் நெல்சன். இதனை ட்ரோல் மற்றும் மீம்ஸ்களுக்கு அசால்டாக பதிலளித்த அவரது வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post