படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே.. மறைந்த ‘கடைசி விவசாயி’ நடிகர்.. கலங்கிய படக்குழு

Kadaisi vivasayi old grandpa dead before movie release

இயக்குநர் எம்.மணிகண்டன் இயக்கத்தில் முதியவர் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் கடைசி விவசாயி. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்டு ஹார்வி இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Kadaisi vivasayi old grandpa dead before movie release

கொரோனாவால் இப்படத்தின் வெளியீடு தாமதமாகி வந்த நிலயில், கடந்த பிப்ரவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் கண் கலங்கி உருகி படத்தை பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக கடைசி விவசாயி பட இயக்குநர் எம்.மணிகண்டனை உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்த மிஷ்கின், மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த மணிகண்டனுக்கு நன்றி கூறி மணிகண்டனின் கரங்களில் முத்தமிட்டு வாழ்த்தினார்.

Kadaisi vivasayi old grandpa dead before movie release

இந்த படத்தின் மாயாண்டி கதாப்பாத்திரத்தில் நடித்த நல்லாண்டி எனும் நிஜ விவசாயி தம் எதார்த்தமான நடிப்பால் அனைவரின் ஈர்த்தார். தன் வாழ்க்கைக்கு நெருக்கமான கதையே படத்தில் இருந்ததால், கதையுடன் ஒன்றிய கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.

Kadaisi vivasayi old grandpa dead before movie release

ஆனால் துரதிஷ்டவசமாக படம் வெளியாகும் முன்பே நல்லாண்டி உயிரிழந்துவிட்டதால், படத்தை பார்க்காமல் போய்விட்டார் என அவரது குடும்பத்தினரும் படக்குழுவினரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Kadaisi vivasayi old grandpa dead before movie release

Share this post