'காசேதான் கடவுளடா' - ‘துணிவு' 2வது சிங்கிள் அப்டேட் On The Way ?

kaaseydhaan kadavuladaa thunivu movie 2nd single update to be released soon hastag trending on social media

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

kaaseydhaan kadavuladaa thunivu movie 2nd single update to be released soon hastag trending on social media

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.

kaaseydhaan kadavuladaa thunivu movie 2nd single update to be released soon hastag trending on social media

தற்போது, வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

kaaseydhaan kadavuladaa thunivu movie 2nd single update to be released soon hastag trending on social media

இப்படம், 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம். மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.

kaaseydhaan kadavuladaa thunivu movie 2nd single update to be released soon hastag trending on social media

இந்நிலையில், இப்படத்தின் 2வது சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இதன் ஹேஷ்டேக் பதிவிடவே, ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

kaaseydhaan kadavuladaa thunivu movie 2nd single update to be released soon hastag trending on social media

Share this post