Viral Video: ‘இவங்கெல்லாம் பிக்பாஸ்'ல என்ன பண்ணாங்க’ ஷிவானி, ஆஜீத்,ரியோ என சீசன் 4 போட்டியாளர்களை கழுவி ஊற்றிய அசீம்.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், மாடல் குயின்சி, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, நடிகை ஆயிஷா எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த சீசனில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருபவர் அசீம். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். பிற போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, ஒருமையில் பேசுவது, புறணி பேசுவது என பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வார்னிங் கொடுத்தும் அதே தவறுகளை செய்து தான் வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட போட்டியாளர்கள் குறித்து பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பேசி இருக்கும் அசீம், ‘ஆஜீத் எல்லாம் அந்த சீசனில் ஒன்றுமே செய்யவில்லை. ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி, ரியோ போன்ற அனைவரும் பெரிதாக ஒன்றும் பண்ணவில்லை. நிஷா ஏன் வந்தார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை பார்க்கிறவர்களுக்கும் புரியவில்லை’ என்று பேசி இருக்கிறது.
அசீம் சொன்ன இந்த விஷயத்தை பலர் விமர்சித்து வந்தாலும், அவர் சொலவதில் நியாயம் இருக்கிறது என்று பெரும்பாலான நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், 4வது சீசனில், ஷிவானி பெரிதாக எதுவும் விளையாடவில்லை ஆனால், அவர் இறுதி வாரம் வரை தொடர்ந்தார். ஆனால், அவரை விட சிறப்பாக விளையாடிய சனம் செட்டி எல்லாம் ஷிவானிக்கு முன்பே வெளியேற்றப்பட்டு இருந்தார்.
அதே போல தான் இந்த சீசனில் தனது பங்களிப்பை அதிகம் கொடுத்த வந்த ஆயிஷாவின் வெளியேற்றமும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அவரை விட ரசிகர்களின் அதிக வெறுப்பை சம்பாதித்த ADK மற்றும் ஜனனி எல்லாம் உள்ளே இருக்கும் போது ஆயிஷா வெளியேற்றம் ரசிகர்களை பெருத்து ஏமாற்றத்திற்கு தள்ளியது. இதனால் ஆயிஷாவின் ரசிகர்கள் விஜய் டிவியை விமர்சித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல அசீம், முந்தைய சீசன் குறித்து பேசி இருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானிக்கும் அஸீமுக்கு பகல் நிலவு தொடரில் நடித்த போது காதல் ஏற்பட்டது என்றும் அதனால் தான் அசீம் தனது மனைவியை பிரிந்தார் என்றும் கூட கிசுகிசுக்கள் வெளியானது. அதனால் தான் ஷிவானி கலந்துகொண்ட சீசனில் அசீம் வைல்டு கார்ட் போட்டியாளராக உள்ளே செல்ல இருந்த போது ஷிவானியின் அம்மா சேனல் தரப்பில் வாக்குவாதம் செய்து அசீம் என்ட்ரியை தடுத்தார் என்றும் கூட அப்போது செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#ClownAzeem is badmouthing previous season contestants! He attacks #Shivani, #Aajeedh and #Gabriella saying they were useless! He said #Rio & #Nisha edhukku vandhaangane therla! Clown is such a mannerless and unethical player!#BiggBossTamil6 #Vikraman #VaathiVikraman #Vikraman𓃵 pic.twitter.com/9lXN5lz8MS
— siva (@winsiva1994) December 12, 2022
Azeem fans will come and say that I'm targeting him when their fav does things like listing S4 contestants, including even Rio, and calls them waste. Azeem is extra arrogant, maybe the audience claps are getting to his head.#BiggBossTamil6 pic.twitter.com/lL9nVgvAWu
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) December 12, 2022