இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் மூலம் மஞ்சிமா மோகனுடனான காதலை உறுதி செய்த கவுதம் ! இனி டும் டும் டும் தான்..!

Gautham karthik confirms his love with manjima mohan with insta status

பிரபல நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கவுதம் கார்த்திக், கடல் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் செம ஹிட் ஆனது.

Gautham karthik confirms his love with manjima mohan with insta status

மேலும், ஹர ஹர மஹாதேவகி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது 2 படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், தேவராட்டம் என்னும் படத்தில் மஞ்சிமா மோகன் அவர்களுடன் ஜோடியாக நடித்தார்.

Gautham karthik confirms his love with manjima mohan with insta status

ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், காலத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Gautham karthik confirms his love with manjima mohan with insta status

இந்நிலையில் ’தேவராட்டம்’ படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்த நிலையில் விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி தீயாக பரவி வருகிறது.

இதுகுறித்து இருவரும் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் மஞ்சிமா மோகன் பிறந்தநாளை முன்னிட்டு, கெளதம் கார்த்திக் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்த பதிவை வைத்து இருவரும் காதலிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யபப்பட்டுள்ளது.

Gautham karthik confirms his love with manjima mohan with insta status

அந்த புகைப்படம் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post