இனி இவருக்கு பதில் இவரா ? பாக்கியலட்சுமி சீரியலில் நடக்க போகுதா அதிரடி மாற்றம் ? TRP என்ன ஆகும் ?

Did radhika sarathkumar will be the new bagiyalakshmi role

ஒரு சீரியல் மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மனதில் ஆழமாக பதிய காரணம் அதில் வரும் கதாபாத்திரம் அல்லது கதை தான். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இல்லத்தரசிகளின் டாப் பேவரைட். பாரதி கண்ணம்மா சீரியல் தொடரை தொடர்ந்து, டிஆர்பியில் டாப் லெவல் வகித்து வருகிறது.

Did radhika sarathkumar will be the new bagiyalakshmi role

குடும்ப தலைவிகள் படும் கஷ்டங்கள் ஒரு குடும்பத்தில் வரும் சிக்கல்கள் என எதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த தொடரை இல்லத்தரசிகள் கொண்டாடி வருகின்றனர். இதில் அப்பாவி மனைவியாக மிகவும் வெகுளியாக பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. இவரின் நடிப்புக்காகவே இந்த சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருவதும் ஒரு உண்மை.

Did radhika sarathkumar will be the new bagiyalakshmi role

தற்போது அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முக்கிய கேரக்டரான சுசித்ரா விலக உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து, நடிகை சுசித்ராவுக்கு பதில் பிரபல நடிகை ராதிகா பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வாணி ராணி, சித்தி போன்ற சீரியல்களில் எதார்த்தமான நடிப்பை ராதிகா காட்டி நடித்து இருந்தாலும் சுசித்ரா ரோலில் ரசிகர்கள் அவரை ஏற்று கெள்வார்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Share this post