ஹன்சிகாவின் ‘காந்தாரி‘ First Look'ஐ இந்த தமிழ் படத்தின் காப்பியா என troll செய்யும் நெட்டிசன்ஸ்!

gandhari first look trolled as similar to kanchana movie poster

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.

gandhari first look trolled as similar to kanchana movie poster

ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

gandhari first look trolled as similar to kanchana movie poster

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.

gandhari first look trolled as similar to kanchana movie poster

சமீபத்தில், இவர் நடிப்பில் இவரது 50வது படமான மஹா வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் உள்ளன. ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

gandhari first look trolled as similar to kanchana movie poster

ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் பாரம்பரிய முறைப்படி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

gandhari first look trolled as similar to kanchana movie poster

பாட்னர், 105 மினிஸ்ட், மை நேம் ஸ் ஸ்ருதி, ரௌடி பேபி போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இதில், நடிகை ஹன்சிகா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காந்தாரி’. ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதை எழுதியுள்ளார். இவருடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

gandhari first look trolled as similar to kanchana movie poster

வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கோரமாக ஹன்சிகா இருக்கிறார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்ஸ், இந்த போஸ்டரை பார்க்கும் போது காஞ்சனா பட போஸ்டரைப் பார்ப்பது போல இருப்பதாகவும், ஏற்கனவே காஞ்சனா ஒன்று, இரண்டு,மூன்று வெளியாகிவிட்ட இது காஞ்சனா பகுதி 4’ஆ என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கிண்டலடித்து வருகின்றனர்.

gandhari first look trolled as similar to kanchana movie poster

Share this post