வேணும்னே இப்டி செஞ்சாரா ? அனிருத் இப்படி செய்வாருன்னு நினைக்கல.. அதிருப்தியில் ரசிகர்கள்..!

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் பணி முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

கடந்த சில நாட்களுக்கு முன், இப்படத்தில் இடம் பெரும் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியானது. இந்த காட்சிகளில், திருவிழாவில் தனுஷுடன் நித்யா மேனன் நடனமாடும் காட்சிகளும், ராஷி கண்ணா மற்றும் தனுஷ் இருக்கும் ஒரு காட்சியும் வெளியானது.

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

இந்நிலையில், கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக படக்குழுவினர் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் திருச்சிற்றம்பலம் கன்ஃபார்மாக தியேட்டரில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

உயர்நிலைப் பள்ளி தோழி அனுஷாவாக ராஷி கண்ணா, கிராமத்து தென்றல் ரஞ்சனியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனனின் திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழியாக ஷோபனாவும், கண்டிப்பான இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜ், பாசக்கார தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர்.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

தற்போது தனுஷின் ரோல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த டீசரில், உணவு டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் ஸ்கூட்டரில் தனுஷ் இருப்பது போல வீடியோ வெளியிடப்பட்டது.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

தற்போது இப்படத்தின் ரீலிஸ் தேதி வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ள தனுஷ் திரையரங்கில் அனைவரையும் சந்திப்பதாக திருச்சிற்றம்பலம் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்தார்.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

இதனிடையே படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று மாலை வெளியாவது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியானது. தனுஷ் எழுதி பாடியிருக்கும் தாய் கிழவி எனும் பாடல் நேற்று வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அனிருத் மற்றும் தனுஷ் மீண்டும் இணைந்ததால் இப்பாடலை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.

Fans got disappointed for thiruchitrambalam first single song on anirudh

ஆனால் இப்பாடல் ரசிகர்களை துளிகூட திருப்தி படுத்தவில்லை என்பது தான் உண்மை. அனிருத் இதுவரை இசையமைத்த பாடல்களிலேயே தாய் கிழவி தான் சுமாரான பாடல் என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள். எனவே இப்படத்திலிருந்து வெளியாகும் அடுத்த பாடலாவது சிறப்பாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் நம்பியுள்ளனர்.

மேலும், இத்தனை ஆண்டுகள் வேறு இசையமைப்பாளர்களை வைத்து பாடல் இயக்கியதால் அனிருத் கடுப்பில் இப்டி செய்துவிட்டாரா என மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Share this post