ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் 'AK61' அப்டேட் கேட்ட அஜித் பேன்ஸ்.. ஹோ இந்த புகைப்படம் தான் காரணமா?

Fans asking ak61 update from aiswarya rajinikanth information getting viral on social media

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.

Fans asking ak61 update from aiswarya rajinikanth information getting viral on social media

இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார். இதுமட்டுமின்றி, விசில் படத்தில் நட்பே நட்பே பாடல் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் பாடல் என இரண்டையும் பாடியுள்ளார்.

Fans asking ak61 update from aiswarya rajinikanth information getting viral on social media

மேலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென் அவர்களுக்கு டப்பிங் பேசியதும் இவர்தான் இவர்தான். இப்படி பல்வேறு திறமைகளை கொண்ட இவர், தற்போது தனது பிட்னஸ் மீது ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், தனது யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

Fans asking ak61 update from aiswarya rajinikanth information getting viral on social media

விவாகரத்துக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.

Fans asking ak61 update from aiswarya rajinikanth information getting viral on social media

தற்போதைய தகவலின்படி, விவாகரத்து அறிவித்த பின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார்களாம். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள்.

Fans asking ak61 update from aiswarya rajinikanth information getting viral on social media

அந்த வீட்டிற்கு, தற்போது இருவரும் அடிக்கடி சென்று வருவதாகவும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Fans asking ak61 update from aiswarya rajinikanth information getting viral on social media

கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. டைரக்ஷனில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா ‘பயணி’ என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி, வெளியிட்டார். ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

Fans asking ak61 update from aiswarya rajinikanth information getting viral on social media

இந்நிலையில், சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்துள்ளார். அவருடன் ஒரு காபி அருந்தியதாகவும் அவருடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் கூறி சில புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் கமெண்ட்டில் ’AK61’ அப்டேட் சொன்னாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Share this post