"தளபதி67 LCU தான்.. அதுல நானும் நடிக்கிறேன்".. மேடையில் சீக்ரெட்டை போட்டுடைத்த பகத் பாசில்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக தளபதி விஜய் உடன் தளபதி67ல் கூட்டணி அமைக்கவிருக்கிறார். இப்படம் குறித்து நிறைய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு இதன் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கூறி வந்தார். தற்போது, வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுவிட்டதால், தளபதி67 குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
விஜய் கேங்ஸ்டாராக நடிக்கும் இந்த படத்தில், மிஷ்கின், கெளதம் மேமன், மன்சூர் ஆலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், யோகி பாபு, பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தாலும், இதுவரை இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் நடிகர் கமல்ஹாசனும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
அந்த வரிசையில், தற்போது, நடிகர் சியான் விக்ரம் இப்படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி விட்டதாகவும், ‘தளபதி 67’ படத்தில் நடிப்பதற்காக விக்ரம் மொத்தம் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து சைன் செய்துளளதாக நம்ப தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரிஷா நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்றும் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் முதலில் விக்ரமை தான் லோகேஷ் நடிக்கவைப்பதாக இருந்தாராம். பின்பு சில காரணங்களால் விக்ரம் நடிக்கமுடியாமல் போனதாம். இதையடுத்து அநேகமாக படத்தில் மெயின் வில்லனாக விக்ரம் நடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் இப்படத்தின் சீக்ரெட்டை போட்டுடைத்துள்ளார். அதில் தளபதி67 படம் LCU (லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்) கதை தான் எனவும், அதில் தாம் நடிப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதன் வீடியோ செம வைரலாகி வருகிறது.
Confirmed LCU 🔥🔥🔥 #Thalapathy67𓃵 #varisu #LokeshKanagaraj #LCU @Dir_Lokesh @actorvijay 🔥 pic.twitter.com/Lc21hyHRLq
— Enddrum Thalapathy 🎟️ (@amuthavana1) January 23, 2023