'படத்தில் நான் அந்த மாதிரி நடிச்சது எனக்கு பிடிக்கவே இல்ல' - RJ பாலாஜி பளீர்..

rj balaji opens up about not interested in acting in films as friend character

RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

rj balaji opens up about not interested in acting in films as friend character

அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார். இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

rj balaji opens up about not interested in acting in films as friend character

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர். இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது. நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

rj balaji opens up about not interested in acting in films as friend character

இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம்

rj balaji opens up about not interested in acting in films as friend character

அதன்படி வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. படத்தில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி நல்ல வரவேற்பை பெற்றார்.

rj balaji opens up about not interested in acting in films as friend character

மேலும் தற்போது, ஆர்.ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் தொகுப்பாளர், தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த சமயத்தில் வெறுத்துள்ளீர்களா என கேட்டார். அதற்காக ஒவ்வொரு நாளும் வெறுத்திருக்கிறேன் என் எந்த நண்பர்களுக்குமே நான் நடித்த நண்பன் கதாபாத்திரங்கள் பிடிக்கவே இல்லை.

rj balaji opens up about not interested in acting in films as friend character

இது முக்கியத்துவம் என்பதை தாண்டி எனக்கு பிடித்திருந்தால் மட்டும் தான் நான் அதை செய்வேன். நான் டிவியில் கூட தொகுப்பாளராக பணியாற்றி சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அது பிடிக்காத சமயத்தில் அங்கிருந்து வெளியில் வந்து விட்டேன் அதேபோல் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்தேன் அப்போது கதாபாத்திரத்தில் மிகவும் ஜாலியாக இருந்தது என் அருகிலேயே நடிகர் நடிகைகளை பார்க்க முடிகிறது அதுவே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் தான்.

rj balaji opens up about not interested in acting in films as friend character

ஒரு 15-20 படங்கள் போய்விட்டது அதன் பிறகு நம்மளுடைய வேலை நன்றாக இல்லையே என தெரிந்த போது அதில் இருந்து விலகி வந்துவிட்டேன். அதனால் நண்பர்கள் கதாபாத்திரத்தை நடித்த போது நான் மிகவும் சந்தோஷப்பட்டது இல்லை. ஆனால் அதன் மூலம் பெற்ற நண்பர்கள் வட்டாரத்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ந்தேன். நான் ஒரு ஹீரோவுக்கு நண்பனாக நடித்த போதுதான் எனக்கு ஒரு கௌதம் கார்த்திக் என்ற நண்பர் கிடைத்தார். அதர்வா, ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி இவர்களுக்கிடையே நட்பெல்லாம் அந்த ஒரு பயணத்தின் பொழுதுதான் எனக்கு கிடைத்தது இந்த மக்களை தெரிந்து கொண்டதில் நான் சந்தோஷமாக இருந்தேன் ஆனால் அந்த கதாபாத்திரத்தை நடிக்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

Share this post