'hello gentle man..so proud of u': நடிகர் விஜய்யை பாராட்டிய வாக்காளர்...வாக்களிக்கும் போது நிகழ்ந்த சுவாரஸ்யம்..!!(வீடியோ)

Elder man appreciates vijay as gentleman so proud of you viral video

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவில் பொதுமக்களும், பிரபலங்களும் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்த அவரைக் காண அப்பகுதியில் அவரது ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர். இதனால் வாக்குச்சாவடி இருந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. நடிகர் விஜய் தனது வாக்கை செலுத்த வந்த தனியாக வாக்குச்சாவடி வந்தார்.

அப்போது மூதாட்டி ஒருவர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு விஜய்யும் புன்னகைத்து இரு கை கூப்பி மூதாட்டிக்கு வணக்கம் தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் விஜய் வாக்குசாவடியில் இருந்த வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது போன்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

நடிகர் விஜய் வாக்குசாவடிக்கு வாக்களிக்க வந்த நேரத்தில் அங்கு இரண்டு பேர் மட்டுமே நின்று இருந்தார்கள், அவர்கள் வணக்கம் தெரிவிக்க அவர்களுக்கு விஜய்யும் வணக்கம் தெரிவித்தார். மற்றபடி அவர் எந்த ஒரு மன்னிப்பையும் கேட்கவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் வாக்குசாவடிக்குள் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வந்தன. இந்த வீடியோவில் அவர் அங்கிருந்த வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்கிறார் என்று சிலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த வாக்காளர்களில் ஒருவர் Hello Gentleman So Proud என கூறினார். இதற்கு விஜய் இருகைக்கூப்பி நன்றி தெரிவித்தார். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

Share this post