என்னது 'சில்லா சில்லா' இந்த பாடல் காப்பியா? 10 செகண்ட் பாட்டை வைத்து தீயாய் பரவும் ட்ரோல்ஸ்!
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அஜித் நடிக்கும் துணிவு படம் 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம்.
இப்படத்தில், மஞ்சு வாரியார், மற்றும் சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா என்னும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஜிப்ரான் இசையில் அனிருத் குரலில் இப்பாடல் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பாடல் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் லீக் ஆகியுள்ளது. படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியூட்டி உள்ளது.
‘சில்லா சில்லா’ பாடல் 10 செகண்ட் கொண்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனினும் இந்த பாடல் கேட்பதற்கு செம்ம மாஸாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ‘சில்லா சில்லா’ பாடல் தற்போது திருட்டு தனமாக சில நொடிகள் வெளியாகி இருந்தாலும் இதனை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், இணையத்தில் வெளியாகி உள்ள 10 செகண்ட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த பாடல் காப்பி என்ற புது சர்ச்சையை கிளப்பி உள்ளனர். அதாவது சில்லா சில்லா பாடல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் அனிருத் பாடிய ஜல புல ஜங் பாடல் போல இருப்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர். 10 செகண்ட் வீடியோவைப் பார்த்து அதுக்குள்ள காப்பி என்று சொல்வதா என கேட்டு இணையத்தில் ஒரு போரே நடந்து வருகிறது.
விஜயின் வாரிசு படத்திற்காக சிம்பு பாடிய தீதளபதி பாடலை நானும் ரவுடிதான் படத்தில் வரும் வரவா வரவா என்ற பாடல் போல இருப்பதாக கூறி நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாக்கினர். எந்த பாடல் வந்தாலும் அதனை இணையத்தில் காப்பி என ட்ரோல் செய்வது வாடிக்கையாகி விட்டது.