‘ஜோ’ பெயரை திடீரென நீக்கிய சூர்யா.. சூர்யா - ஜோதிகா இடையே சண்டையா?
நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.
2006ம் ஆண்டு இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இருவீட்டாரின் பெயரில் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது சூர்யா 41, சூரரைப் போற்று இந்தி ரீமேக் என ஏராளமான படங்களை தயாரித்து வரும் 2டி நிறுவனம், சூர்யா தம்பி கார்த்தி நடிக்கும் விருமன் படத்தையும் தயாரிக்கின்றனர். குட்டி புலி பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள விருமன் பட போஸ்டர் மூலம் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது, இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, தனது தயாரிப்பில் இதற்கு முன் வெளியான கார்கி, ஜெய் பீம் போன்ற படங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கும் என குறிப்பிட்டிருந்தார். விருமன் படம் தொடங்கியபோது வெளியிடப்பட்ட போஸ்டர்களில் கூட அவ்வாறு தான் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் சமயத்தில் வெளியிடப்படும் எந்த போஸ்டரிலும் ஜோதிகாவின் பெயரே இடம்பெறவில்லை.
சூர்யா தயாரிக்கும் விருமன் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஜோதிகா பெயர் நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், சூர்யா - ஜோதிகா இடையே சண்டை ஏற்பட்டுவிட்டதால் தான் இப்படி நடந்திருக்கலாம் என பல தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரியாமல் ரசிகர்களும் குழம்பிப்போய் உள்ளனர். விரைவில் சூர்யா - ஜோதிகா தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.