Viral Video: தளபதி67க்கு அப்றம் கைதி 2.. டில்லி - ரோலெக்ஸ் காம்போ.. கார்த்தி வெளியிட்ட செம அப்டேட் !
அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை,கோ, சகுனி, தோழா, மெட்ராஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
கைதி, தம்பி, சுல்தான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குட்டி புலி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் ப்ரோமோஷன்காக பல இடங்களுக்கு படக்குழுவினர் சென்று பேட்டி கொடுத்தும், விழா நடத்தியும் வருகின்றனர். அப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கைதி 2 படத்தின் அப்டேட் மற்றும் டில்லி - ரோலெக்ஸ் குறித்தும் கார்த்தி பேசியுள்ளார்.
அதில், கைதி 2 அடுத்த வருடம் பிளான் செய்துள்ளோம். அதுவும், லோகேஷ் விஜய் சாரோட படத்தை முடித்த பிறகு என்று கூறியுள்ளார். மேலும், அவரே, டில்லி - ரோலெக்ஸ் பத்தி கேக்காதீங்க நிஜமா எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
#Thalapathy67 #Kaithi2 🔥👏 pic.twitter.com/888TftEwhr
— User is hyped for #T67 (@JD_Jaffna) August 9, 2022