சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக போகும் பிரேம்ஜி ! இந்த காம்போ புரியாத புதிரா இருக்கே !

Does premji to act as villan to sivakarthikeyan rumour facts

சாதாரண தொகுப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து, இவரது டான் திரைப்படம் மே மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே, பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடல் எழுதி அதன் மூலம் வரவேற்பை பெற்றார். தற்போது, தலைவரின் 169வது படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சில திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் சிவகார்த்திகேயனின் அயலான் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், தெலுங்கு – தமிழ் திரைப்படமாக உருவாக உள்ள சிவகார்த்திகேயனின் 20வது திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பூஜையின்போது நடிகர் பிரேம்ஜி கலந்து கொண்டிருந்தார். இதனால், இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுவும் வழக்கம் போல ஹீரோவின் நண்பராக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், தற்போது வெளியான தகவலின்படி இதில் வில்லனாக பிரேம்ஜி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. காமெடி வில்லனாக இருந்தால் பரவாயில்லை, மாறாக உண்மையில் ஒரு வில்லனாக இருந்தால் என்னவாகும் இது செட் ஆகுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this post