'சேது' பட விழா, பிரஸ்மீட் எதுக்குமே பாலா சார் கூப்பிடல.. என்னைய இனி நடிக்காதன்னு சொல்லிட்டாரு.. ஏன்னு தெரில - அபிதா OpenTalk

Director bala insults actress abitha after sethu movie video getting viral on social media

ஷூட்டிங் பார்க்க சென்ற போது, இயக்குனர் பார்த்து பேசி தனது அடுத்த படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அபிதா. சீரியல் தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், எட்டுப்பட்டி ராசா, கோல்மால் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Director bala insults actress abitha after sethu movie video getting viral on social media

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த அபிதாவிற்கு, 1999ம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். பூவே பெண் பூவே, புதிய அலை, அரசாட்சி, சுயேச்சை MLA, நம் நாடு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Director bala insults actress abitha after sethu movie video getting viral on social media

மேலும், நிறைய சீரியல் தொடர்களில் நடித்துள்ள இவர், வரம், குங்குமம், ராஜ ராஜேஸ்வரி, போன்ற பல தொடர்களில் நடித்த போதிலும், 2007 முதல் 2013 ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த திருமதி செல்வம் தொடரின் மூலம் இல்லத்தரசிகளின் பேவரைட் ஆக மாறினார். எதார்த்தமான திரைக்கதை, எதார்த்தமான நடிப்பு என இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார்.

Director bala insults actress abitha after sethu movie video getting viral on social media

அதன் பின்னர், தற்போது ஒரு சில தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. சேது படத்தில் பரத நாட்டியம் ஆடுவது போல காட்சி எடுக்கப்பட்ட போது இவருக்கு நடனம் வரவில்லை என கடுப்பான பாலா, உன்னை எல்லாம் ஹீரோயினா போட்டேன் பாரு என்ன செருப்பால அடிக்கணும் என்று அனைவர் முன்பும் கூறியதால் இவர் பாலாவுடன் பேசவே இல்லையாம்.

Director bala insults actress abitha after sethu movie video getting viral on social media

அதன் பின்னர் இவர் அம்மாவிடம் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று புலம்பியுள்ளார். பின்னர் சினிமா என்றால் அப்படி தான் இருக்கும் என்று அவர் அம்மா சொன்னதால், அடுத்த நாள் பாலாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதுள்ளார். பாலாவும் ‘உங்க நல்லதுக்கு தான் கோவப்பட்டேன்’ என்று கூறி சமாதானம் செய்து வைத்தாராம். இதுகுறித்து, மேலும் பேசிய அவர் பாலா சார் எந்த புராஜக்ட்டும் பண்ண வேண்டாம்னு சொன்னார்.

Director bala insults actress abitha after sethu movie video getting viral on social media

என் சூழ்நிலைக்காக நான் அடுத்து படங்களில் நடிச்சேன். அது அவருக்கு பிடிக்கலையான்னு தெரியல. படம் முடிந்த பின்னர் என்னை எந்த பிரஸ் மீட்டிற்கும் கூப்பிடவில்லை. அந்த படத்திற்காக நானும் நிறைய கடின உழைப்பை போட்டு இருக்கிறேன் ஆனால் எதற்காக அவர் என்னை அப்படி செய்தார் என்று தெரியவில்லை.

Director bala insults actress abitha after sethu movie video getting viral on social media

அதன் பின்னர் தான், சினிமாவை விட்டு சீரியலில் நடிக்க வந்து விட்டேன். சேது படத்திற்கு பின்னர் சிட்டிசன் படத்தில் மீனா கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த பட வாய்ப்பைக் கூட இவர் நிராகரித்து விட்டாராம். அதன் பின்னர் ஏன் அந்த பட வாய்ப்பை மிஸ் செய்தோம் என்று மிகவும் கஷ்டப்பட்டாராம்.

Share this post