பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் காலமானார் !

Actor prathap pothan passed away

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிரதாப் போத்தன். இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் என திரையுலகில் வலம் வந்த இவர், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார்.

Actor prathap pothan passed away

ஜீவா, வெற்றி விழா, லக்கி மேன், சீவலப்பேரி பாண்டி போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார். படிக்காதவன், பூஜை, ரெமோ, துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Actor prathap pothan passed away

இன்று, உடல் நலக்குறைவால் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனது வீட்டில் பிரதாப் போத்தன் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Share this post