கொஞ்சகொஞ்சமாக குறையும் மரியாதை? தனுஷின் ட்வீட்டை கம்பேர் செய்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது, சமீப காலமாக, கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.
அதன் பின்னர் இவர்களின் விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எந்தவித கருத்தையும் வெளிகாட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன், ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அப்போது சமரச பேச்சுவார்த்தையில் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது. ஆனால், அது குறித்த எந்த ஒரு அறிகுறியும் தற்போது வரை இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளுக்கு தனுஷ் வாழ்த்தி பதிவிட்ட ட்வீட் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இந்திய பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் என வாழ்த்துக்களை கூறி குவித்து வந்துள்ளனர்.
நடிகர் தனுஷும் தன் பங்கிற்கு முன்னாள் மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என்று கூறியதோடு கைக்கூப்பி வணக்கம் கூறும் ஸ்மைலியை போட்டு வாழ்த்துயுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு ஒரு மருமகனாக, மை தலைவா, என்றுமே ஒரேவொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், லவ்யூ சோ மச் என்று பதிவிட்டுள்ளார். இதனை பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனுஷிடம் மரியாதை குறைகிறது என்று கூறி வருகிறார்கள்.