'அரிவாள எடுத்து வெட்டுற அளவுக்கு..' விமர்சனங்கள் குறித்து காட்டமாக பேசிய எச்.வினோத்
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.
தற்போது, வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இப்படம், 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம். மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் 2வது சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இதன் ஹேஷ்டேக் பதிவிடவே, ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், துணிவு பட ப்ரோமோஷனுக்காக இயக்குனர் எச். வினோத் பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். படத்தை பற்றியும், அஜித்தை பற்றியும் பல சுவாரஸ்யான விஷயங்கள் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் விமர்சனங்கள் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “ஒரு இயக்குனராக படத்தின் மீதுள்ள விமர்சனங்களை ஏற்க வேண்டியது என்னுடைய கடமை. விமர்சனங்களை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள மாட்டேன். நியாயமான விமர்சனங்களை கேட்பேன். முடிந்தால் திருத்திக்கொள்வேன். ஆனால் தற்போதுள்ள விமர்சனங்கள் எல்லாம் அரிவாளை எடுத்து வெட்டுற அளவுக்கு வன்மமா மாறிடுச்சு.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்துபோவதே சரி என நினைக்கிறேன்” என காட்டமாக பேசி இருந்தார். அதேபோல் வலிமை தோல்விப் படமா என்கிற கேள்விக்கு பதிலளித்த எச்.வினோத், “வலிமை ரிலீஸ் ஆனபோது கலவையான விமர்சனங்கள் வந்தது உண்மைதான். ஆனால் பேமிலி ஆடியன்ஸுக்கு படம் பிடித்துப் போனது. பணம் போட்ட தயாரிப்பாளர் தொடங்கி அனைவருக்குமே அது வெற்றிப் படமாக அமைந்தது. நான் பார்த்த வேலைக்கான வெற்றியை வலிமை எனக்கு கொடுத்தது என்பது தான் உண்மை” என தெரிவித்துள்ளார்.