வித்யுலேகா வீட்டு விசேஷத்தில் தனுஷ்-செல்வராகவன்.. இவ்ளோ நெருங்கிய சொந்தமா ?

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரையுலகில் பிரபல துணை நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யுலேகா ராமன். இவர் பிரபல நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள் ஆவார்.

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

2012ம் ஆண்டு வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்த நீதானே எந்தன் பொன்வசந்தம் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா. வீரம், காக்கி சட்டை, மாஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி திரையுலகிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3வது ரன்னர் அப் இடத்தை வென்றார்.

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

இந்த நிலையில் நடிகை வித்யூலேகா ராமன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ், செல்வராகவன், பிரசன்னா, சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, வித்யூலேகாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், குடும்பமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

இந்நிகழ்ச்சியின்போது தனுஷ், செல்வராகவன், சினேகா, பிரச்சன்னாவுடன் எடுத்த புகைப்படங்களை வித்யூலேகா ராமன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

Dhanush and selvaragavan with actress vidhyulekha in family function

Share this post