ரசிகையின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்த அஜித்.. வைரலாகும் வீடியோ
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் தனது விடுமுறை நாட்களைக் கழிக்க குடும்பத்துடன் பாரிசுக்கு சென்றிருந்தார். அங்கு இருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அவ்வப்போது, அவருடன் எடுத்து கொண்ட புகைபடங்களை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.
தன்னுடைய விடுமுறை நாட்களை கழிந்து விட்டு சென்னை வந்த அஜித் மிகவும் வேகமாக ஏர்போட்டில் நடந்து செல்லும் போது, ஏர்போட்டில் வேலை செய்பவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என அவரை அழைத்து தங்களது விருப்பத்தை கூற, அஜித் அவர்கள் பக்கத்தில் வந்து நின்று போஸ் கொடுத்தது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களுக்கு கைகொடுத்ததோடு மட்டுமின்றி அவர்களை பார்த்து சல்யூட் அடித்து என வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.
தற்போது, நடிகர் அஜித் திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அங்கு நடிகர் அஜித்தை பார்க்க குவிந்தனர்.
கூட்டம் அதிகமானதால் போலீசாரால் கூட அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தகவல் நடிகர் அஜித்திற்கு தெரியவர, அவர் உடனடியாக திருச்சி ரைபிள் கிளப் கட்டிடத்தின் மாடியில் இருந்து தன்னை காண கூடியிருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்து கையசைத்து, தம்ப்ஸ் அப் செய்து கைகூப்பி நன்றியும் தெரிவித்தார்.
இந்நிலையில், தன்னிடம் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் தலையில் கைவைத்து அவர் ஆசிர்வாதம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
#PeoplesHeroAJITHKUMAR
— MALAYSIA AJITH FAN CLUB ® (@Thalafansml) July 27, 2022
The way be blessed his female fan ❤️#AK61 || #AjithKumar pic.twitter.com/aKVJG8ztLz