ரயிலில் பாடிய பெண்ணை வலைபோட்டு தேடும் டி.இமான்.. வைரலாகும் வீடியோ !

தமிழ் திரையுலகில் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். இதனைத் தொடர்ந்து, விசில் படத்தில் ‘அழகிய அசுரா’ பாடல் வெற்றியைத் தொடர்ந்து, இவர் பிரபலமாக அறியப்பட்டவர். பின்னர், ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள இமான், திருவிளையாடல் ஆரம்பம், கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் பாடலுக்காக பல விருதுகளை வென்றார்.
விஸ்வாசம், சீமராஜா, கடைக்குட்டி சிங்கம், டிக் டிக் டிக், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது குரலுக்கும் இசைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஸ்வாசம் பட இசையமைப்பிற்காக கலைமாமணி விருதை வென்றார்.
சமீபத்தில் எதற்கும் துணிந்தவன், யுத்த சத்தம், மைடியர் பூதம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்த இவர், தற்போது கேப்டன், மாலை, காரி, பொய்க்கால் குதிரை,பொது, வள்ளி மயில் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இவரது மனைவி மோனிகா அவர்களை பிரிவதாக தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார். நவம்பர் 2020ம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் இவர்கள், டிசம்பர் 2021ம் ஆண்டு சுமூகமாக பிரிந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இமான் 2வது திருமணம் செய்து கொண்ட தகவல்களும் செம வைரல் ஆனது.
இவர் போராடி மேலே வந்தவர் என்பதால் தன் துறையை சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கை கொடுத்து தூக்குவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார். இதற்கு என தனி டீமையே உருவாக்கி பாடும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவி வருகிறார் இமான். அந்த வகையில் சமீபத்தில் ஓடும் ரயிலில் பாடி பிரபலமான ஒரு பெண்ணை தேடி வருகிறார் இசையமைப்பாளர்.
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வந்த ஒரு வீடியோவில் ஒரு பெண், ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலை நேர்த்தியாக பாடியிருந்தார். இதனை டேக் செய்து, இந்த பெண்ணுக்கு யாராவது நல்ல வாய்ப்பு கொடுங்கள் என் கூறி இசை ஜாம்பவான்களை டேக் செய்து ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வந்தனர்.
இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண் இருந்தால் பகிருங்கள் என இமான் ட்வீட் செய்துள்ளார். இந்த செயல் குறித்து இமானுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. முன்னதாக திருமூர்த்தி என்ற பார்வை குறைபாடு கொண்ட இளைஞர் ‘கண்ணான கண்ணே’ பாடலை அருமையாக பாடியிருந்ததை கண்ட இமான் ‘அண்ணாத்தை படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்தார்’ அந்த படத்தில் ‘வா சாமி’ பாடலை பாடியிருந்தார் திருமூர்த்தி.
சமீபத்தில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி வீடியோ மூலம் பிரபலமானவர் திருமூர்த்தி. அவரை நேரில் சந்தித்த கமலஹாசன் ஏ ஆர் ரகுமான் இசை பள்ளியில் சேர்த்து அவருக்கு இசை கற்க உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திறமையான பாடகி , இசை அமைப்பாளர் இமான் அவர்கள் காதுகளில் இவர் பாடல் கேட்டது , இவரை பற்றி அறிந்தவர்கள் இமான் அவர்களுக்கு தெரிவியுங்கள் மக்களே 🙏 @immancomposer pic.twitter.com/nSBkOBQT3x
— 🔥தீ🔥 (@RajiniGuruRG) July 18, 2022