'நெஞ்சுல கை வெச்சா Cobra Audio Launchல விக்ரமுக்கு நெஞ்சு வலின்னு நியூஸ் போட்ருவீங்க..' சீயான் விக்ரம் Thug Life Speech...

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வருத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். 2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் கோப்ரா. இதன் போஸ்டர், விக்ரம் லுக் அனைத்தும் பெரிய ஆர்வத்தை தூண்டியது. இவர் ஏற்கனவே 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’, 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் கோப்ரா படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது.

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லலித் குமார் தயாரிக்கிறார்.

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 11 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

இந்நிலையில் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு மாரடைப்பாக இருக்கலாம் என கருதப்பட்டு வந்த நிலையில், அந்த செய்தி உண்மை இல்லை Chest discomfort காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டனர்.

Chiyaan vikram speech in cobra audio launch video getting viral on social media

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அதில் சீயான் விக்ரம் பங்கேற்றுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this post