#N75 மாஸ் அப்டேட்.. மீண்டும் ராஜா ராணி பட கூட்டணியா ? வெளியான அறிவிப்பு வீடியோ !
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம். அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.
இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.
இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி, கேரளா, கொச்சியில் உள்ள பழமை வாய்ந்த கோவில், தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் என சென்றனர். புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். பின்னர், ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய விக்கி - நயன் ஜோடி, வீட்டுக்கு கூட வராமல் நேராக அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்புக்கு நயன்தாரா சென்றார்.
இதுதவிர ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இறைவன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஹ்மத் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், நயன்தாரா நடிக்க உள்ள 75வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. ஹீரோயினை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்கிற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.
நயன்தாரா நடிக்க உள்ள 75வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
Announcing #ladySuperstar75 🥳
— Zee Studios (@ZeeStudios_) July 12, 2022
Zee Studios is excited to collaborate with #Nayanthara for her 75th film! 💃🏻
The shoot will begin soon! 🎬#Jai #SathyaRaj @Nilesh_Krishnaa @dineshkrishnanb @tridentartsoffl @Naadstudios pic.twitter.com/nVVCnLek83