'Hotel'ல பக்கத்து Tableக்கு.. Superstar'ரே போய்' நெகிழ்ந்து பேசிய வெங்கடேஷ் பட் !

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.

இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட்.

முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

அடுத்தடுத்து எலிமினேஷன், காமெடி என கலவையாக இருந்து வரும் இந்நிகழ்ச்சியில், நடுவர் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ கடந்த ஒரு வாரமாக வைரலாகி வந்தது. இந்நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கோமாளிகள் அனைவரும் ரஜினிகாந்த் அவர்களின் பட கதாபாத்திரங்களில் வேடமிட்டு இருந்தனர்.

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

இதனால், வெங்கடேஷ் பட் அவர்கள் ரஜினிகாந்த் அவர்கள் குறித்த சில யாருக்கும் தெரியாத விஷயங்களை ஷேர் செய்துள்ளார். அப்போது, ரஜினிகாந்த் குறித்து பேசிய அவர், “1993ம் ஆண்டு நான் Trainee ஆக இருந்தேன். Trainee வேலை என்பது, பிளேட் எடுப்பது, சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வது போன்றதாகும். அந்த சமயத்தில், ஒரு தடவை டின்னர் முடிந்து, ரஜினிகாந்த் சார் குடும்பமும், மற்றொரு குடும்பமும் மட்டும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்.

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

அந்த டேபிளில் உள்ளவர்கள், 50வது திருமண நாள் விழாவை கொண்டாடிய படி இருக்க, ரஜினிகாந்த் சாருடன் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொள்ள விருப்பப்டுகின்றனர். இது பற்றி, Waiter-யிடம் அவர்கள் கேட்க, ரஜினியை தொந்தரவு செய்ய முடியாது என பதிலளித்தார்.

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்த ரஜினிகாந்த், Waiter-ஐ அழைத்து இது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த ரஜினி, அந்த டேபிளில் கேக் வெட்டுவதற்காக அனைவரும் தயாரான போது, தனது டேபிளில் இருந்து எழுந்து போய், அவர்களை வாழ்த்தி, அவரை கட்டி பிடித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Chef venkatesh bhat shares personal experience with superstar rajinikanth in cook with comali set

ஒவ்வொரு முறையும் கேமராவுக்கு வெளியே தன்னை ஒரு சாதாரண மனிதனாக ரஜினி காட்டிக் கொள்கிறார். இதனால்தான் அவரை அனைவரும் Extraordinary ஆக பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Share this post