Vikram & Rolex ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அர்ஜுன் தாஸ்.. வைரலாகும் பதிவு !

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

போதைப் பொருள் வியாபாரியான விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி என 3 மனைவிகளுடன் மனைவிகளுடன் மஜாவாக வாழும் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கார்ட்டூனில் பாப்பாய் கீரையை சாப்பிடுவது, சோட்டா பீமில் பீம் லட்டு சாப்பிடும் போது உடம்பில் சக்தியேற்றுவது போல் கஞ்சா எடுத்துக்கொண்ட உடன் அசுர பலம் பெறும் காட்சிகள் அல்டிமேட்.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா. விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

கைதி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன் தாஸ், தற்போது விக்ரம் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், கமலஹாசன், சூர்யா ரசிகர்களிடம் அர்ஜுன் தாஸ் மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

அதில் அவர் கூறியிருப்பது, ‘மச்சி ஒரு சீன் என்று லோகேஷ் கனகராஜ் அழைக்கும் போது எந்தக் கேள்வியும் கேட்க மாட்டோம், சரி என்று சொல்வோம். ஆனால், அந்த ஒரு காட்சியில் ஒரு பக்கம் கமல் சார், மறுபக்கம் சூர்யா சார். என்ன செய்ய முடியும்? நாம் கொண்டாடி தீர்க்கின்ற இரண்டு நடிகர்கள் நம் கண்முன் நிற்கும் போது அவர்களை பார்க்க தான் தோன்றும்.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

மானிட்டரில் அவர்களை மீண்டும் மீண்டும் பார்த்தது தான் என் வாழ்வின் சிறந்த அனுபவம். இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். எனக்கு பிடித்த 3 பேர், கமல் சார், சூர்யா சார் மற்றும் லோகேஷுடன் வேலை செய்துள்ளேன். கமல் ஹாசனை பார்க்க சாம்கோவுக்கு வெளியே காத்திருந்தது போய் இன்று அவர் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நனவாகிவிட்டது. இந்த வாய்ப்புக்கு நன்றி. அதேபோல் நன்றி சூர்யா சார். உங்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு கிடைத்த கௌரவம்.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

நான் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறேன் என்கிற தகவல் வெளியானதும் கமல் சார் மற்றும் சூர்யா சாருடன் சேர்ந்து நடித்த அனுபவம் பற்றி ரசிகர்களாகிய நீங்கள் கேட்டீர்கள். ஆனால், அப்பொழுது என்னால் அதுகுறித்து சொல்ல முடியவில்லை. அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது லைஃப்டைம் செட்டில்மென்ட் என்றே சொல்வேன்’ என் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Arjun das posts about vikram movie and apologizing suriya and kamal fans

Share this post