'பிரபல சீரியலில் களமிறங்கும் பிக் பாஸ் ஜூலி'.. வெளியான ஜீ தமிழ் ப்ரோமோ வீடியோ..

Biggboss julie to act in zee tamil serial promo video getting viral

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலம் அடைந்த ஒருவர் ஜூலி. வீர தமிழச்சி என பெயரை பெற்ற இவர், சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரல் ஆகி, சாதாரண பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பேசும் அளவிற்கு ஒருவராக மாறினார்.

இதன் மூலம், கிடைத்த பிரபலத்தினால் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அந்த நிகழ்ச்சியில், இவரது பெயர் மொத்தமாக அடிபட்டு பல நெகடிவ் இமேஜ்களை பெற்றார்.

Biggboss julie to act in zee tamil serial promo video getting viral

அதன் பின்னர், அந்த நெகட்டிவ் விமர்சனங்களை மாத்த நிறைய நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் பங்கேற்று வந்தார். மேலும், சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் பிசியாக போட்டோஸ், வீடியோ என பதிவிட்டு வந்த ஜூலி, BB ஜோடிகள் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Biggboss julie to act in zee tamil serial promo video getting viral

அதனைத் தொடர்ந்து, BB அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்து தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்தார். ஜூலி டாப் 3 இடங்களில் ஒன்றை பிடிக்கவேண்டும் என்று மக்கள் ஆசைப்படும் அளவிற்கு மக்கள் மனதை வென்றார்.

Biggboss julie to act in zee tamil serial promo video getting viral

இந்நிலையில், இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளார். தந்தை, தாய் பாசத்தை அடிப்படையாக கொண்டு சில மாதங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் தொடர் “தவமாய் தவமிருந்து” தொடர்.

Biggboss julie to act in zee tamil serial promo video getting viral

இந்த தொடரில் திருமண பெண்ணாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் ஜூலி. அந்த ப்ரோமோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

Share this post