மாதவனால் ஆச்சர்யத்தில் உறைந்து போன சூர்யா.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ !

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

ஒரு காலத்தில் பேவரைட் க்ரஷ், சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் மாதவன். தற்போது அவ்வளவு திரைப்படங்களில் நடிக்காத மாதவன், முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் இது. நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

கான்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தை இந்திய அரசு சார்பில் World Premiere ஆக ரிலீஸ் செய்தனர். கடந்த சம்மருக்கே வெளியாகவிருந்த ராக்கெட்ரி-தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் சார்பில் உலகமெங்கும் ரசிகர்களுக்காக ராக்கெட்டரி திரைப்படம் தியேட்டரில் வெளியாக போகிறது.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் நடிகர் மாதவன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் உரையாடிய பிறகு, படத்தின் முழு ஸ்கிரிப்டையும் மாற்ற வேண்டியிருந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானி நீதி பெற பல ஆண்டுகள் போராடினார் என்பதை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

நம்பி நாராயணன் அவர்களை சந்தித்து பேசிய பிறகு தான், அமெரிக்காவில் உள்ள லீக் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதும், மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுடன் பணிபுரிந்த அனுபவமும் அவருக்குத் தெரிந்தது என்றும் மாதவன் கூறினார்.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

மேலும் நம்பி நாராயணனின் கண்ணீரைப் பார்த்த அன்றுதான் இந்தக் கதையை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. விஞ்ஞானி நம்பி நாராயணன் போதிய அங்கீகாரம் கிடைக்காமல், பொய்யான குற்றச்சாட்டினால் அவரது குடும்பம் சந்தித்த அவமானத்தை உணர முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

உண்மையை நிரூபிக்க போராடும் விஞ்ஞானியின் கண்களில் கண்ணீரைப் பார்த்தபோது கதையை திரைப்படமாக்க முடிவு செய்ததாக நடிகர் மாதவன் மனம் திறந்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, பழைய பஞ்சாங்கத்துக்கும் இன்றைய ராக்கெட்ரிக்கும் தொடர்பு இருப்பதாகவும், பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அணுப்பினார்கள் என்றும் மாதவன் பேசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், பல ட்ரோல் மற்றும் மீம்ஸ்களுக்கு ஆளான மாதவன், மன்னிப்பு கேட்டு அதற்கு விளக்கம் அளித்து பதில் பதிவிட்டிருந்தார்.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

தற்போது, ராக்கெட்ரி படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ராக்கெட்ரி படத்தில் தனது ரோலில் நடிப்பதற்காக சூர்யா, படத்தின் ஷூட்டிங் செட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனும் இருந்துள்ளார். அவருடன் சூர்யா கைகுலுக்கி பேசிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் அச்சு அசலாக நம்பி நாராயணன் கெட் அப்பில் ஒருவர் வந்து சூர்யாவை கட்டிபிடித்து வரவேற்றுள்ளார். அவர் யாரென புரியாமல் சூர்யா ஒரு நிமிடம் ஷாக்காகி நின்றுள்ளார்.

Actor suriya got surprised by madhavan getup in nambi narayanan look alike

பின்னர், தான் மாதவன் என்பதை அவரே அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அச்சு அசலாக நம்பி நாராயணனாக மாறி இருந்த மாதவனை பார்த்து சூர்யா தலையில் கை வைத்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நம்பி நாராயணனின் நிஜ மற்றும் நிழல் உருவங்களை ஒன்றாக பார்த்த அதிர்ச்சியில் சூர்யா ஷாக்காகி நிற்கும் வீடியோ தற்போது வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.

Share this post