முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா? 2ம் பாகத்தின் ப்ரோமோவா இது? தீயாய் பரவும் வீடியோ

bharathi kannamma part 2 promo video fake is spreading on social media

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

bharathi kannamma part 2 promo video fake is spreading on social media

டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

bharathi kannamma part 2 promo video fake is spreading on social media

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

bharathi kannamma part 2 promo video fake is spreading on social media

இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. சீரியலில் ஹேமா வேடத்தில் நடித்து வரும் லிசா சீரியல் இயக்குனர் அகிலன் அஞ்சலி உளிட்டோருடன் இணைந்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் மக்கள் சீரியலை எப்படா முடிப்பீங்க என கேட்கிறாங்க ஆனால் எங்களுக்கு எண்டே கிடையாது என கூறுவது போல தெரிவித்திருந்தனர்.

bharathi kannamma part 2 promo video fake is spreading on social media

இந்நிலையில், திடீரென 2ம் பாகத்தின் ப்ரோமோ என ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் அது உண்மையான ப்ரோமோ கிடையாது நெட்டிசன்கள் அவ்வாறு எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். அதில் வெண்பா காரில் சென்று கொண்டிருக்கும் கண்ணம்மாவையும் ஹேமா மற்றும் லட்சுமியையும் லாரியை விட்டு மோத செய்கிறார். பின்னர் ஹேமா லக்ஷ்மி இருவரும் பிரிந்து விடுகின்றனர். கண்ணம்மாவின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஹேமா ஒரு ஏழை குடும்பத்தில் வளர்கிறார். அவர் ஆட்டோக்கார பெண்மணியாக மாறுகிறார்.

bharathi kannamma part 2 promo video fake is spreading on social media

லக்ஷ்மி மிகப் பெரிய பணக்கார வீட்டில் வாழ்கிறார். அதனால் அவரை அவர்கள் மருத்துவம் படிக்க வைத்து டாக்டர் ஆக்குகின்றனர். ஆனாலும் இந்த இரண்டு குழந்தைகளும் கண்ணம்மாவின் நினைவில்லையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் ஆட்டோவில் ஹேமா சென்று கொண்டிருந்த போது, லட்சுமி தனது காரில் வந்து மோதிவிடுகிறார். பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது. இந்த ப்ரோமோ வேறு ஒரு சீரியலின் கதையை எடுத்து எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்று நன்றாக தெரிகிறது. ஆனால் பலரும் இது உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Share this post