அட்லியை எச்சரித்த ஷாருக்கான்? இதனால் தான் ஆத்திரம் அடைந்தாரா? வெளியான ஹாட் தகவல்!
சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.
அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் ‘பிகில்’. இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.
ஷாருக்கான் வைத்து அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி தயாரிப்பில் கதாநாயகியாக நயன்தாரா, முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
வித்தியாசமான லுக்கில் ஷாருக்கான் இருப்பது, அந்த தோரணை அனைத்தும், பார்க்கையில் இதுவும் அட்லீக்கு பிளாக்பஸ்டராக அமையும் என தெரிகிறது. மேலும், படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார்.
ஜவான் திரைப்படத்தின் கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்துடையது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ‘பேரரசு’ கதையை திருடி அட்லீ ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளதாக மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் ஃபிலிம் சாம்பருக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் மற்றும் பாலிவுட் திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை விசாரிக்க நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது ஷாருகான் மற்றும் அட்லிக்கு இடையே படப்பிடிப்பில் ஒரு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், அட்லியை ஷாருக்கான் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கி வரும், ‘ஜவான்’ படத்தை ஷாருக்கானின் பட நிறுவனம் தான் தற்போது தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு குறிப்பிடப்பட்ட தொகையை விட, அட்லி அதிகமாகவே செலவு செய்து வருகிறாராரம்.
ஆன் ஸ்கிரீன் மட்டும் இன்றி ஆப் ஸ்கிரீனில் ஏகப்பட்ட செலவுகளை இழுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட ஷாருக்கான், அட்லீயை அழைத்து ஆன் ஸ்கிரீனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளுங்கள், ஆனால் ஆப் ஸ்கிரீனுக்கு தேவைக்கு அதிகமாக ஏன் செலவை இழுத்து விடுகிறீர்கள் என கூறி எச்சரித்துள்ளதாக ஹாட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.