Beast குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பீஸ்ட் பட நடிகர்.. எதிர்பார்ப்பை தூண்டிய பதிவு

Beast motion poster to release today

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களில் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Beast motion poster to release today

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை தொடர்ந்து, டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அரபிக் குத்து வெளியாகி செம குத்தாட்டம் போடவைத்து வருகிறது. மேலும், நேற்று (16.03.22) ஜாலியா ஜிம்கானா என்னும் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Beast motion poster to release today

தற்போது, பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகிறது என அப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.

Beast motion poster to release today

Share this post