நாடாளுமன்றத்தில் அமைச்சரை ஆங்கிலத்தில் பேச வைத்த திமுக எம் . பி கனிமொழி..!

Dmk Mp Kani Mozhi Speech Rajeshaba Hindi Minister Talk To English

மக்களவை உறுப்பினர் மற்றும் மகளிரணிச் செயலாளர் தி.மு.க எம் . பி கனிமொழி மக்களவையில் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்ததால், குறுக்கிட்ட கனிமொழி அமைச்சரை ஆங்கிலத்தில் பேசச் சொல்ல , அதை ஏற்று அவரும் ஆங்கிலத்தில் பதிலளித்தார் .

நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பொது விநியோக துறை பற்றிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார் . அப்போது பேசிய , தி . மு . க எம் . பி . கனிமொழி , தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசியை இலவசமாக விநியோகம் செய்து வருகிறது .

அது மட்டுமல்லாமல் நிறைய திட்டங்கள் ரேஷன் மூலமாகவே வழங்கப்படுகிறது . இந்த நிலையில் , ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கும் பொருள்களுக்கு யார் நிதி ஒதுக்குவது என்று கேள்வி எழுப்பினார் .

கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் கூறத் துவங்கினார் . அப்போது குறுக்கிட்ட கனிமொழி , `` உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக பேசத் தெரியும் என்பது எனக்கு தெரியும் .

நீங்கள் இந்தியில் பேசினால் அதை புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கிறது . நான் ஆங்கிலத்தில்தான் கேள்வி கேட்டேன் . நீங்களும் ஆங்கிலத்தில் பதில் கூறுங்கள் “ என்றார் . அதையடுத்து , பியூஷ் கோயல் , `` சகோதரியை மதிக்கிறேன் “ என்று கூறிவிட்டு பின்னர் ஆங்கிலத்தில் பதிலளித்தார் .

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து உணவு வகைகளுக்கும் மத்திய அரசே நிதி வழங்கும் என்றார் .

Share this post