விரைவில் பிரியங்கா வீட்டில் குழந்தை சத்தம்.. மகிழ்ச்சியில் போட்டோவுடன் அவரே வெளியிட்ட பதிவு !

Baby soon to arrive in priyanka deshpande house

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகளை விட அந்த சேனலில் வேலை செய்யும் அனைத்து விஜேக்களும் பிரபலம். டிடி, பாவனா, ரக்ஷன், மா கா பா, பிரியங்கா உள்ளிட்ட பலரும் உள்ளனர்.

Baby soon to arrive in priyanka deshpande house

தற்போது, மக்கள் விரும்பும் முன்னணி தொகுப்பாளினியாக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் பிரியங்கா. இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Baby soon to arrive in priyanka deshpande house

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

Baby soon to arrive in priyanka deshpande house

தற்போது, பிரியங்கா வீட்டிற்கு விரைவில் குழந்தை வரவிருப்பதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் பிரியங்கா.

Baby soon to arrive in priyanka deshpande house

பிரியங்காவிற்கு ரோஹித் என ஒரு தம்பி இருக்கிறார். ரோஹித்திற்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரியங்கா தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கு அவர் கூறியுள்ளார்.

Baby soon to arrive in priyanka deshpande house

இந்த பதிவில் தனது தம்பி மற்றும் தம்பி மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ‘ஆண்டி கிட்ட வா மா’ என அழகாக கூறியுள்ளார். விரைவில் அத்தையாகப்போகும் பிரியங்காவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Baby soon to arrive in priyanka deshpande house

Share this post