சூர்யா ரோலக்ஸ் இல்லையாம் ? லோகேஷ் ட்விஸ்ட் வேற.. வைரலாகும் தகவல் !

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

போதைப் பொருள் வியாபாரியான விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி என 3 மனைவிகளுடன் மனைவிகளுடன் மஜாவாக வாழும் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கார்ட்டூனில் பாப்பாய் கீரையை சாப்பிடுவது, சோட்டா பீமில் பீம் லட்டு சாப்பிடும் போது உடம்பில் சக்தியேற்றுவது போல் கஞ்சா எடுத்துக்கொண்ட உடன் அசுர பலம் பெறும் காட்சிகள் அல்டிமேட்.

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா. விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது.

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில், ரோலக்ஸ் கேரக்டரில் அறிமுகம் சூர்யா தான் உண்மையான ரோலக்ஸா? அல்லது விக்ரம் ஏஜண்ட் தான் சூர்யா ரோலக்ஸா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரோலக்ஸ் கேரக்டரை பார்த்து கமல் கடைசியில் சிரிக்கும் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பதால் ரோலக்ஸ் கேரக்டர் ஒரு புதிராக கூட இருக்கலாம்.

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

ஒருவேளை கமல் மற்றும் சூர்யா இருவரும் சேர்ந்து உண்மையான ரோலக்ஸ் கேரக்டர் யார் என்பதை கண்டுபிடித்து அவரை வீழ்த்துவதே அடுத்த பாகத்தில் கதையாக இருக்கலாம். இன்னும் லோகேஷ் யோசனை எவ்வளவு நேக்காக இருக்கும் என தெரியவில்லை. படம் ரிலீஸ் ஆகும் வரையில் லோகேஷ் தனி சஸ்பென்ஸ் தனக்கான ட்விஸ்ட் எல்லாம் வைத்திருப்பார் என்பது உறுதி.

Suriya is not rolex suspense factor of lokesh kanagaraj is getting viral on social media

Share this post