160 மொழிகளில் அவதார் 2.. கிளிம்ப்ஸ் வீடியோ & ரிலீஸ் தேதி குறித்து வெளியான அப்டேட்

Avatar 2 going to be released on december 16 and glimpse video to get released soon

2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமெரூன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அவதார். டெக்னாலஜி வளர்ந்து வரும் சமயத்திலேயே பிரம்மாண்டத்தின் உச்சம் காட்டி எடுக்கப்பட்ட இப்படம் உலக சினிமாவையே வியப்பில் ஆழ்த்தியது. பாக்ஸ் ஆபிஸிலும் 2500 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

Avatar 2 going to be released on december 16 and glimpse video to get released soon

அவதார் படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தின் அடுத்த பாகம் உருவாவதை உறுதி செய்த ஜேம்ஸ் கேமரூன், படத்தின் பணிகளிலும் மும்முரம் காட்டி வந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே, அப்படம் எப்போது ரிலீசாகும் என்கிற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இருந்தது.

Avatar 2 going to be released on december 16 and glimpse video to get released soon

அவதார் 2ம் பாகத்தை 2020ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் தாமதம் ஆனது. இதனால், அவதார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தை தயாரித்துள்ள டுவெண்டியத் செஞ்சுரி நிறுவனம், இப்படம் இந்தாண்டு ரிலீசாகும் என அறிவித்தது.

Avatar 2 going to be released on december 16 and glimpse video to get released soon

இந்நிலையில், அவதார் 2 வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதி உலகமெங்கும் 160க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Share this post