ராக்கெட் வேகத்துல அடுத்தடுத்து அப்டேட்.. AK63 அறிவிப்பா ? மே 1 கொண்டாட்டம் தான் போல !

Ak63 update might be released on ajith birthday

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் 3 வருட காத்திருப்பிற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை. பைக் திருட்டு, நகை கொள்ளை, போதை பழக்கம் என இந்த காலத்தில் இளம்தலைமுறையினர் சிக்கிக்கொள்ளும் சில எதார்த்தம் குறித்த கதையை கொண்டது இப்படம்.

Ak63 update might be released on ajith birthday

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து, AK61 படத்தின் அப்டேட் ஏற்கனவே வந்துவிட்டது. அதன்படி, மீண்டும் போனி கபூர் - எச்.வினோத் - அஜித் கூட்டணி ஒன்றாக படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில், சென்னை அண்ணாசாலை போன்று அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது என கூறப்பட்டது.

Ak63 update might be released on ajith birthday

மேலும், AK62 திரைப்படத்தின் அப்டேட் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெளியானது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

Ak63 update might be released on ajith birthday

வருகிற மே 1ம் தேதி, அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்து வரும் நிலையில், வலிமை திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

Ak63 update might be released on ajith birthday

தற்போது லேட்டஸ்ட் தகவலாக AK63 படத்தின் அறிவிப்பும் அஜித் பிறந்த நாளான மே 1 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிகிறது. அஜித்தின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது கோகுலம் சினிமாஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Ak63 update might be released on ajith birthday

இதற்கிடையில், சுதா கொங்கரா மற்றும் கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் இணையும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Share this post