பிளாஸ்டிக் சர்ஜரியால் முகம் இப்டி ஆயிருச்சா ? அடையாளம் தெரியாமல் மாறிப்போன அதுல்யா..
பால்வாடி காதல் என்னும் தமிழ் குறும்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இதன் மூலம், காதல் கண் கட்டுதே என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றார். பின்னர், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஏமாளி என்னும் திரைப்படத்தில் செம கவர்ச்சியான ரோலில் நடித்த இவர், அப்போது இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆனது. நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, ஏன் பெயர் ஆனந்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
சந்தனு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இளசுகளை கவரும் கதையில் நடித்திருந்தார். தற்போது, எண்ணித் துணிக, வட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் அதுல்யா ரவி, தற்போது தனது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அதுல்யா ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதற்குக் காரணம் அந்த போட்டோவில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார். அவர் முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் சில ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டீர்களா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மூக்கு, உதடு என பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றனர். தற்போது அந்த லிஸ்டில் அதுல்யாவும் சேர்ந்து விட்டாரா என்று தெரியவில்லை. அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.